அருள்மிகு ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோவில் (கும்பகோணம்)

Primary Deity
ஸ்ரீ ராமபிரான்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
Contact Number
+91-Not Available

இக்கோவில் அச்சுத நாயக்கரால் கட்டப்பட்டது. இக்கோவிலிலுள்ள விக்ரகங்கள் தாராசுரத்தில் புதையுண்டு இருந்ததாகவும், தஞ்சை மன்னன் ரகுநாத நாயக்கர் புதையுண்டதை வெளிக்கொணர்ந்து பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. இத்தலம் தட்சிண அயோத்தி எனப் போற்றப்படுகிறது. கணு நாளன்று சீதா பிராட்டி, சக்ரபாணி கோவில் விஜயவல்லித் தாயாருடனும், சாரங்கபாணிக் கோவில் கோமளவல்லித் தாயாருடனும் எழுந்தருளுவார். மஹாமஹத்தன்று ஸ்ரீராமரும், சீதையும் மகாமகக் குளத்தில் எழுந்தருளி தீர்த்தம் வழங்குகின்றனர்.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ ராஜாராமன் வடக்கு நோக்கி திருமுக மண்டலத்துடன், பட்டாபிஷேக திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சீதா பிராட்டி, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்ணன், ஹனுமன் ஆகியோர் உடன் உள்ளனர். உற்சவராக ஸ்ரீ கோதண்டராமர் சேவை சாதிக்கின்றார். ஒரு கையால் வீணையை மீட்டியவாறும், மற்றொரு கையில் ராமாயண புத்தகத்தை வைத்துக் கொண்டும், எங்கும் காணாத புதுமையான கோலத்தில் காட்சி தரும் ஹனுமனின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. உள் திருச்சுற்றில் ராமாயண ஓவியங்கள் மூன்று அடுக்குகளாக வண்ணச் சித்திரங்களாக (250) வரையப்பட்டுள்ளன. மும்முறை வலம் வந்தால் ராமாயணத்தை பாராயணம் செய்த திருப்தி கிடைத்து விடுகிறது. மஹாமண்டபத்தில் உள்ள பிரம்மாண்டமான தூண்கள் சிற்பக் கருவூலமாக உள்ளன. சுக்ரீவ பட்டாபிஷேகம், விபீஷண பட்டாபிஷேகம், மஹாவிஷ்ணுவின் அவதாரக் கோலங்கள் என அனைத்தும் நேர்த்தியானவை. ஹனுமன் இல்லாத தூணே கிடையாது எனலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...