அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திரஸ்வாமி திருக்கோவில் (படவேடு)

Primary Deity
மூலவர்: ஸ்ரீ யோக ராமச்சந்திரன், உற்சவர்: கோதண்டராமர்.
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
செங்கல்பட்டு
Contact Number
+91-Not Available

ஜமதக்னியின் ஆஸ்ரமம் 1 கி.மீ. தூரத்திலுள்ளது. ஆஸ்ரமத்தினருகே, ஒன்பதடி உயரமுள்ள வீர ஆஞ்சநேயரும், பஞ்சமுக ஆஞ்சநேயரும், கோட்ட வரதராஜர் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம்.

தெற்குபுறமாக உள்ள குன்றை குண்டலிபுரம் என்பர். இங்குள்ள சுப்ரமண்ய ஸ்வாமியின் கோவில் சாந்நித்யம் மிகுந்தது.

வள்ளி-தெய்வயானை உடனாய தேவசேனாதிபதி, இங்கு எழுந்தருளி அருள் புரிகின்றார். மயில் மேல் நின்ற கோலம் வித்தியாசமான தரிசனம்.

ரேணுகாம்பாள் கோவிலைச் சுற்றிலும் - லட்சுமி நரசிம்மர், கைலாஸ விநாயகர், சின்னகோட்டை வரதர், அம்மையப்பர் ஈஸ்வரி, வேணுகோபாலஸ்வாமி ஆகியோரின் கோவில்கள் உள்ளன.

மூலவர்: ஸ்ரீ யோக ராமச்சந்திரன், உற்சவர்: கோதண்டராமர், சீதா தேவி, செண்பகவல்லித் தாயார்.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ ராமபிரான், அர்த்த பத்மாஸனத்தில், அமர்ந்த கோலத்தில், யோக முத்திரை கொண்டு சேவை சாதிக்கின்றார். ராமபிரான் - ஹனுமனுக்கு அருள் புரியும் காட்சி அழகாக இருக்கின்றது. கரங்களில் ஏடு - எழுத்தாணி கொண்டு எழுதும் பாவனையில் ஆஞ்சநேயர் காணப்படுகின்றார். சீதா தேவி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். செண்பகவல்லித் தாயார்.

ஆயுதங்களின்றி ஹனுமனுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் ஸ்ரீ ராமர் காணப்படுவதால், குரு ஸ்தானத்தில் வைத்து போற்றுகின்றனர்.

பிள்ளையார், சிறிய திருவடி, பெரிய திருவடி, வேணுகோபாலர் ஆகிய திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...