முன்பொரு சமயம் வைகுந்தத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. பெண்ணாசை இல்லாதவர்கள் யார் என்பதே சர்ச்சை.
அனைவரும் கூடியிருக்கும் சபையில், "நான் ஒருவன் இருக்கிறேனே, பெண்ணாசை இல்லாதவன்" எனக் கூறிவிட்டார் நாரதர். அவரை சோதிக்க எண்ணிய திருமால், அழகிய மோகினியாக உருவெடுத்து பூலோகம் வந்து ஒரு சோலையில் உலவிக் கொண்டிருந்தார்.
மோகினியின் அழகில் மயங்கிய நாரதர் தன்னை மணக்குமாறு வேண்டுகிறார். "சங்கு-சக்கரம் வைத்துள்ளவனையே மணப்பேன்" என மோகினி கூறியதால், நாரதர் திருமாலிடம் சென்று, காரணம் ஏதும் கூறாமல் அவரது சங்கு-சக்கரத்தை கேட்டு பெற்றார். பூலோகம் திரும்பியதும், மோகினியும் மலர் சோலையும் மறைந்து விட்டபடியால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்று சங்கு-சக்கரத்தை திருப்பி கொடுத்தார். பொய் சொன்ன பாவத்திற்கு நாரதரை மகாவிஷ்ணு சபித்து விட்டார்.
அந்த சாபத்தை போக்கிக் கொள்ள இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டதாக ஸ்தல வரலாறு.
"ராஜா" எனும் பெயருடையவர்களை பாடுவதில்லை என்ற கொள்கையால் திருமங்கை ஆழ்வார் இவ்வாலயத்திற்கு விஜயம் செய்திருந்தும் பாடவில்லை எனக் கூறப்படுகிறது.
இக்கோவில் புனருத்தாரணம் செய்ய வேண்டிய நிலையிலுள்ளது.