ஆதிசேன் இறைவனை பூஜித்த ஸ்தலங்கள் எல்லாம் திருநாகேஸ்வரம் எனப் பெயர் கொண்டன.
அநபாய சோழனின் பிரதான மந்திரியாக பணியாற்றிய சேக்கிழார் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சென்று நாகேஸ்வரரை தரிசிப்பது வழக்கம். அமைச்சர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது சொந்த ஊரான குன்றத்தூருக்கு வந்து விட்டார். இங்கிருந்து அடிக்கடி திருநாகேஸ்வரம் போக முடியவில்லையே என வருந்திய சேக்கிழார், திருநாகேஸ்வரத்தில் இருப்பது போலவே குன்றத்தூரில் இக்கோவிலை நிர்மாணித்தார் என ஸ்தல வரலாறு.
திருநாகேஸ்வர ஸ்தலத்துள் உறைபவராக இருப்பதால் இறைவனுக்கு திருநாகேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. ராகு அம்சம் இறைவனோடு ஒன்றி இருப்பதால் ராகு ஸ்தலமாக போற்றப்படுகின்றது.