உத்திர நட்சத்திர தினத்தில் அவதரித்த மாங்கல்ய மகரிஷி, மாங்கல்ய தேவதை மற்றும் அட்சதை தேவதை ஆகியவர்களின் குரு ஆவார். இத்தலத்தில் அகஸ்தியர், வசிஷ்டர் ஆகிய மகரிஷிகளின் திருமண மாங்கல்ய தாரண பூஜைகளை நடத்தியவர்.
திருமண பத்திரிகையில் குறிப்பிடப்படும் அமிர்த நேரத்தில் இத்தலத்திற்கு வந்து மாங்கல்யம் நிலைக்க பிரார்த்தனை செய்கின்றனர். தம்பதிகளின் ஒற்றுமைக்காகவும் வழிபட வேண்டிய ஸ்தலம் என்பார்கள்.
திருமணம் நிச்சயித்தவுடன் பத்திரிகையை இத்தலத்திற்கு கொண்டு வந்து இறைவனடியில் சேர்ப்பித்து பூஜை செய்கின்றனர். பின்னர் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுகின்றனர்.
உத்திர நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய ஸ்தலம்.