கயிலாயத்தில் சிவபெருமானுடன் அமர்ந்திருந்த உமையவள், ஒரு நாள் விளையாட்டாக பொத்தினாள். இதனால் சர்வ லோகங்களும் இருளில் மூழ்கின. சீற்றம் கொண்ட சிவபெருமானால் பிறக்கும்படி சபிக்கப்பட்டு, இத்தலத்தில் பிறந்து காமாட்சி எனும் பெயருடன் வளர்ந்து, நீண்ட காலம் தவமிருந்தாள்.
இறைவன் தன்னை ஆட்கொள்ள தாமதம் ஆனதால், வைராக்யம் பூண்டு, ஐந்து குண்டங்களில் அகோர தீயை வளர்த்து அவற்றின் மத்தியில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு கடுந்தவம் புரிந்தாள். மனமிரங்கிய சிவபெருமான் அங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு, பின்னர் தன்னை மணக்குமாறும் பணித்தார்.
காமாட்சி வளர்த்த அக்னி குண்டங்களின் வெப்பம் தாங்கமுடியாமல் சுற்றுப்புறத்து மக்கள் மிகவும் அவதியுற்றனர். ஆதிசங்கரரின் அர்த்தமேரு ஸ்ரீசக்கர பிரதிஷ்டையால் அக்னியின் ஆவேசம் குறைந்தது என ஸ்தல புராணம் கூறுகிறது. இது சக்தி பீடங்களுள் ஒன்று.