சோழ மன்னன் ஒருவன் இந்த மலை மீதுள்ள இலந்தை மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தான். பிரத்யட்சமான பெருமாளிடம் தனக்கு சேவை சாதித்தது போலவே, இங்கேயே கோவில் கொண்டு அனைவர்க்கும் கல்யாண கோலத்தில் சேவை சாதிக்க வேண்டும் என வேண்டினான். அவன் கோரியபடியே இங்கு எழுந்தருளி சேவை சாதிப்பதாக ஐதீகம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாயிருக்கும். பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மலையடிவாரத்தில் கோவிந்தராஜப் பெருமாள் கோவிலும் இருக்கின்றது. பேருந்து நிறுத்தம் அருகே அகஸ்தீஸ்வரசுவாமி மடம் இருக்கின்றது.