பாலகிருஷ்ணனின் விஷமங்களை பொறுக்க முடியாமல், யசோதை உரலில் கட்டிப் போட, உரலுடன் ஓடி மரங்களை சாய்த்த லீலையால் கயிறு அழுந்தி, வயிற்றில் தழும்பு ஏற்பட்டது. அந்த தழும்புடனேயே காட்சி அளிக்கும் தாமோதரன், பக்தனின் வேண்டுதலுக்காக இங்கு ப்ரஸன்னம். தாம - உதரன் என்பதே தாமோதரன்.
பல நூற்றாண்டுகளாக மாத்வர்களால் பூஜிக்கப்பட்ட விக்ரஹம், தற்போது வைணவர்களால் நடத்தப்படுகிறது. இன்றளவும் பெருமாளுக்கு கோபி சந்தனமே இடுகின்றனர். துவாதச மஹாவிஷ்ணுவின் நாமங்களில் உயர்ந்தது தாமோதரன் எனும் திருநாமமே எனக் கூறுவார்கள்.
ஆதியில் தாமல் நகரமே பிரதானமாக இருந்ததாக கல்வெட்டு குறிப்புகள் குறிப்பிட்டுள்ளன.