மலர்மகளுடன் கருடவாகனத்தில் ஏறி பொருணை ஆற்றின் கரையிலுள்ள ரம்யமான இடங்களை பார்த்து சந்தோஷித்துக் கொண்டிருந்தார் எம்பெருமான். இதைக் கண்ணுற்ற பூமகள் கோபித்துக் கொண்டு பாதாள லோகம் சென்று விட்டாள்.
நிலமகள் இல்லாததால் துன்புற்ற ஜீவராசிகள் எம்பெருமானிடம் சென்று முறையிட்டன.
பாதாளத்திற்கு சென்ற திருமால் நிலமகளை சமாதானம் செய்து அழைத்து வந்தார். இதனால் எம்பெருமான் பூமிபாலர் என்ற திருநாமம் கொண்டார்.
வசிஷ்டரின் சாபத்தால் அசுரனாக மாறிய யக்ஞசர்மா என்பவன் இந்திரன் செய்து கொண்டிருந்த யாகத்தை கலைக்க இடையூறுகள் பல செய்தான். அவனை அழித்து அவனுக்கு நற்கதி அருளிய எம்பெருமான், இந்திரனின் யாகத்தையும் பூர்த்தி செய்ய உதவிய ஸ்தலம்.