பண்டாசுரனை வதைத்த பிறகு பாலா, தன் அன்னையான மஹாசக்தி லலிதாம்பிகையிடமே ஐக்கியமானதாக புராண வரலாறு. பால வடிவத்தில் இருக்கும் அன்னையை 'ஸதா நவ வர்ஷா' என புராணங்கள் வர்ணிக்கின்றன.
பல வருடங்களுக்கு முன், சுப்ரமண்ய அய்யர் என்பவரின் கனவில் தோன்றிய நெமிலி பாலா, தான் ஆற்றில் வருவதாக தெரிவித்தாள். கோவிலுக்கு அருகிலுள்ள குசஸ்தலை ஆற்றில் தினமும் தேடலானார் அய்யர். தொடர்ந்து தேடியதில் நான்காம் நாள் கண்டெடுக்கப்பட்டாள்.
பால வடிவத்தில் அன்னை காட்சி தரும் ஸ்தலம் இதுவே என்கின்றனர்.
நவ சக்திகளான திரிபுரா, திரிபுரேசி, திரிபுரசுந்தரி, திரிபுர வாசினி, திரிபுராஸ்ரீ, திரிபுர மாலினி, திரிபுர ஸித்தா, திரிபுராம்பிகா மற்றும் மஹா திரிபுர சுந்தரி வடிவங்களாகவும், நவ யோகங்களாகவும், நவ சக்கரங்களாகவும் திகழ்கிறாள் எனக் கூறப்படுகிறது.
சக்தி ஸ்தலங்களுள் ஒன்று.