கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது செய்த குறும்புகளும், விஷமத்தனங்களும் கணக்கிலடங்கா. எல்லை மீறிப் போனதாலும், கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும், தாயார் யசோதை குழந்தையின் இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டி, அதை உரலில் சுற்றி விட்டார். கயிற்றுடன் உரலையும் சேர்த்து இழுத்துக் கொண்டு கிருஷ்ணன் தவழ்ந்தான். அப்போது கயிறு வயிற்றை அழுத்தியதால், கயிற்றின் அடையாளம் பதிந்து தழும்பாக மாறியது.
'தாமம்' என்றால் கயிறு, 'உதரம்' என்றால் வயிறு/இடுப்பு பகுதியைக் குறிக்கும். 'தாம-உதரன' என்பதே 'தாமோதரன்' என்ற திருநாமமாக மாறியது. அழகான வதனத்தை (முகத்தை) கொண்டுள்ளதால், 'சௌமிய' என்பதை சேர்த்து 'சௌமிய தாமோதரன்' என அழைக்கின்றனர்.
பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவள் லட்சுமி. இதனால் 'அமிர்தவல்லி' என்ற பெயரைக் கொண்டாள்.
(மந்திரம்) ஓம் தாமோதராய வித்மஹே - ருக்மணி வல்லபாய தீமஹி - தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத்