வெள்ளியம்பல ஸ்வாமிகள் சிவாலயங்கள் சென்று வழிபடுவதையும், சிவத்யானம் செய்து கொண்டிருப்பதையும் வழக்கத்தில் கொண்டவர். மதுரை சென்று சோமசுந்தர கடவுளையும் அன்னை மீனாட்சியையும் தரிசிக்க ஆசை கொண்டார். உடல் நலிவுற்றதால் இயலாமல் போனது. இவ்வூரிலுள்ள மகிழ மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்தார். அந்த மரத்தடி லிங்கத்திலேயே சோமசுந்தரராக தோன்றி அருள் புரிந்தார் சிவபெருமான் என ஸ்தல வரலாறு.
அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் திருக்கோவில் (புவனகிரி)
Primary Deity
சோமசுந்தரேஸ்வரர்
Temple Type
சுந்தரேஸ்வரர் கோவில்
Location
திருவள்ளூர்
Contact Number
+91-Not Available
மூலவர்: சோமசுந்தரேஸ்வரர், அம்பாள்: மீனாட்சியம்மை
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சோமசுந்தரேஸ்வரர். உயரமான பாணம் கொண்டு கம்பீரமாக தரிசனம் தரும் அழகிய சிவலிங்கம். நாகம் குடை பிடிக்க, கவசம் சாத்திய மேனியுடன் சர்வாலங்காரங்களும் கொண்டு காட்சி தருகின்றார்.
கரும்பவள பச்சை மேனியுடன் அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள் மீனாட்சியம்மை.
வலச்சுற்றில் சுந்தர கணேசர், முருகப் பெருமான் மற்றும் பரிவார தேவதைகளையும் காணலாம். உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன.
வெள்ளியம்பல ஸ்வாமிகளின் அதிஷ்டானம் ஒன்றும் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.