அருள்மிகு செல்லப்பிராட்டி அம்மன் திருக்கோவில் (செல்லப்பிராட்டி)

Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
மதுரை
Contact Number
+91-Not Available

Information not available.

இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ லலிதா செல்வாம்பிகை, சரஸ்வதி - லட்சுமி - பார்வதி ஆகிய மூன்று சக்திகளின் அம்சமானவள் என்பதைக் குறிக்கும் வகையில், மகா மண்டபத்து மூன்று வாசல்கதவுகளிலும் மூன்று சக்திகளின் வெவ்வேறு ஸ்வரூபங்களை அழகாக அமைத்துள்ளனர். பிரகாரத்தில் சிவசக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி ஆகிய மூன்று சக்திகளை தரிசிக்கலாம். மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு உருவம் ஏதும் இல்லை. நான்கடி உயரம் கொண்ட செவ்வக வடிவ கற்பலகைதான் மூலவர். ஒரு பீடத்தின் மீது ஸ்தாபித்துள்ளனர். மூலவராக விளங்கும் இந்த கற்பலகையின் மேல் பகுதியில் வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும், 12 சதுரக் கட்டங்களும் -அதில் பராசக்தியின் பீஜாட்சர மந்திரங்களும், நடுவே சூலமும் பொறிக்கப்பட்டுள்ளன. சாட்சாத் பராசக்தியின் வடிவமே என பிரசன்னம் பார்த்து தெரிந்து கொண்டனராம். உற்சவ அம்மனாக ஸ்ரீ லலிதா செல்வாம்பிகை தாமரை பீடத்தில் அமர்ந்து தரிசனம் தருகின்றாள். ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, நெற்றியில் பிறை சந்திரன் துலங்க, அஷ்ட புஜங்களுடன் கூடிய அழகான திருமேனியுடன் தரிசனம் தருகின்றாள். இருகரங்களில் அட்சமாலையும், கமண்டலமும் கொண்டு சரஸ்வதியின் அம்சமாகவும், இருகரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தி லட்சுமி தேவியாகவும், மற்ற இரு கரங்களில் பாசம்-அங்குசம் கொண்டு பார்வதியாகவும், அபய-வரத கரங்கள் இரண்டுமாக காட்சி தருகின்றாள். ஸ்தல விநாயகராக சித்தி விநாயகரும், மகா கணபதி, சுப்ரமண்யர் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். ரிஷ்யசிருங்கரின் சிலா வடிவமும் உள்ளது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...