ஆலய வாசலிலுள்ள நாகலிங்க மரத்தின் கீழ் உள்ள மேடையில் விநாயகர், ஆஞ்சநேயர், நாகநாதர் ஆகிய அழகான திருவுருவங்களை தரிசிக்கலாம். பலி பீடம், கொடிமரம், வேள்விக்குண்டம் தாண்டி பிரதான கருவறை உள்ளது.
பிரதான கருவறையின் மூலவராக அன்னை சீதளா தேவி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அழகிய கருங்கல் திருமேனி. கரங்களில் கத்தி, கபாலம், நாகபாசம், உருக்கு, கதை ஆகியன கொண்டு காட்சி தருகின்றாள். சீதளம் என்றால் குளிர்ச்சி எனப் பொருள்.
மூலவருக்கு பின்னால் சிவந்த முகத்துடன் சிரிக்கும் அன்னை சுதை சிற்பமாக தரிசனம் தருகின்றாள். கதைக்கு மாற்றாக சூலம் வைத்துள்ளார்.
காத்தவராயஸ்வாமி, தொட்டியத்து சின்னான் போன்ற கிராம தேவதைகளையும் தரிசிக்கலாம்.
மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் முடிந்து வைத்து வழிபட்டால் புத்ர பாக்யம் கிடைக்கும் என்பர்.