பாதாளத்தில் இருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டமையால், இவ்வூரை தேவார காலத்தில் 'திரு பாதாளேச்சரம்' என்று அழைத்தனர். இவ்விறைவனை 'திரு பாதாளீச்சரம் உடையார்' என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தனஞ்செய முனிவர் வடிவில் ஆதிசேஷன் பாம்பு உடலும் மனித முகமும் கொண்டு வந்து இவ்விறைவனை வழிபட்டார் என்றும், அதே வடிவத்தில் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர் என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
காமதேனுப் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபட்டது என்றும், அப்போது முட்டியதால் லிங்க வடிவம் மூன்று பிரிவுகளாயின என்றும் கூறுவர். இந்த மூன்று பிரிவுகளும் செப்புத்தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பச்சை திராட்சை, மாங்கனி, மாம்பழச்சாறு ஆகியன விசேஷ நைவேத்தியங்களாகச் செய்யப்படுகின்றன.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.