அருள்மிகு சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில் (இடும்பாவனம்)

Primary Deity
சற்குண நாதேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
பெரம்பலூர்
Contact Number
+91-Not Available

இவ்வூருக்கு அருகேயுள்ள குன்றாளுர் எனும் ஊர், இடும்பன் எனும் அசுரனின் தலைநகர். இடும்பனை வென்று அவனது தங்கையான இடும்பியை மணந்தான் பீமசேனன். இடும்பிக்கு அருள் செய்த பதி இடும்பாவனம் என வழங்கட்டும் என்று வசிஷ்ட மகரிஷி ஆசிர்வதித்தார். சற்குண நிறைவு வேண்டி பிரம்மன் நீண்ட காலம் தவம் மேற்கொண்ட ஸ்தலம் இது. அகத்தியருக்கு இறைவன் மணக்கோலம் காண்பித்த ஸ்தலம். இடும்பன் வழிபட்ட ஸ்தலம். இடும்பன் வழிபட்டதால் இவ்வூர் இடும்பாவனம் எனப் பெயர் பெற்றது. வேதாரண்யத்திலிருந்து மதுரை செல்லும் வழியில் இவ்விறைவனை தரிசிக்க திருஞானசம்பந்தர் வந்தார். இத்தலத்து மணல் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி தந்தமையால், காலால் நடக்காமல், கரங்களால் நடந்து சென்று வழிபட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

மூலவர்: சற்குண நாதேஸ்வரர், அம்பாள்: மங்கள நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் சற்குண நாதேஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். சிவலிங்கத்தின் பின்புறத்தில் பார்வதி - பரமேஸ்வரர் திருமணக் கோலக் காட்சியைக் காணலாம். இவருக்கு இடும்பாவனேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மங்கள நாயகி எனப்படும் கல்யாணேஸ்வரி அம்பாள் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். வெள்ளை வெளேரென அழகிய விநாயகர் காட்சி தருகிறார் - ஸ்வேத விநாயகர் எனப் பிரசித்தி பெற்றவர். தியாகராஜரின் அற்புத வடிவத்தையும் காணலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...