சிவபெருமானை அழைக்காது தட்சன் நடத்திய யாகத்தை, வீரபத்ரன் அழித்து துவம்சம் செய்தார். வந்திருந்த அனைவரும் உயிருக்கு பயந்து சிதறி ஓடிய நிலையில், தேவேந்திரன் கருங்குயில் உருவம் எடுத்து பறந்து விட்டான். பின்னர் இத்தலம் வந்து ஸ்வாமியையும், அம்பிகையையும் தினமும் வழிபட்டு, குயில் வடிவம் நீங்கி சுய உருவம் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இதனால் இவ்வூர் கருங்குயில்நாதன்பேட்டை எனப் பெயர் கொண்டது.
ஆலயத்தையொட்டி உள்ள கருணா தீர்த்தம் எனும் குளத்தில் மூழ்கி குளித்தால் தோல்நோய்கள் எதுவும் வராது என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்.