அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோவில் (வியாசர்பாடி)

Primary Deity
ரவீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

வியாச முனிவர் இவ்விறைவனைப் பூஜித்து வழிபட்டதால், பானுபுரம் எனப் பெயர் கொண்டிருந்த இவ்வூர் வியாசர்பாடி என்றானது. அனுதினமும் சூரியன் இவ்விறைவனைப் பூஜித்து வழிபடுவதால் இவ்விறைவனுக்கு ரவீஸ்வரர் எனும் திருநாமம். முன் காலத்தில் இப்பகுதியிலிருந்த பெரிய ஏரி ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மரகத சிலையே இங்கு அம்பாளாகத் தரிசனம் தருகிறாள் எனக் கூறப்படுகிறது. விஜயநகர மன்னனின் மகளாக வளர்ந்த அன்னை, திருமண வயதை எட்டியதும், இத்தலத்தில் சிவபெருமானை மணந்தார் எனத் தல வரலாறு.

மூலவர்: ரவீஸ்வரர், அம்பாள்: மரகதாம்பாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ரவீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சூரியப் பிரகாச ஒளியைத் தம்முள் சூட்சுமமாகத் தாங்கி ஜோதிர்மயமாகக் காட்சி தருகிறார். கிழக்கு பார்த்த சந்நிதி. மேற்கு பார்த்து சூரிய பகவான் எழுந்தருளியுள்ளார். தெற்கு பார்த்த சந்நிதியில் மரகதாம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சூரியன் தினமும் காலையில் தனது ஒளிக்கதிர்களை நந்தியின் கொம்புகளுக்கிடையே ஊடுருவிச் சென்று சுவாமி மீது படர்ந்து பிரகாசமடைந்து சூரிய பூஜை செய்வது இங்கே விசேஷம். வன்னி மரத்தருகே முனைகாத்த பெருமாள் தரிசனம் தருகின்றார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...