ஜம்புகாசுரன் எனும் அசுரன் செய்த கடுந்தவத்தால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் பல உயிர்கள் மடிந்தன. முனிவர்களும் குழந்தைகளும் தங்களை காப்பாற்ற வேண்டி, ராமரிடம் முறையிட்டனர். ஸ்ரீ ராமரும், பிரயோக சக்கரத்துடன் கூடிய விஷ்ணுவாக தோன்றி அவனை சம்ஹாரம் செய்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அசுரனைக் கொன்ற தோஷம் நீங்க, லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ராமர் வழிபட்டதால் மூலவருக்கு ராமநாதீஸ்வரர் என்ற பெயர் வந்தது.
பல்லக்கு போன்ற வடிவில் பெரிய ஏரி ஒன்று இருப்பதால், இவ்வூருக்கு பல்லகச்சேரி என பெயர் வந்தது.