ராவணனைக் கொன்ற பாவம் விலக, ஸ்ரீ ராமர் இவ்விறைவனை வழிபட வந்தபோது நந்தியம் பெருமான் அவரை தடுத்தாராம்.
அம்பாள் நந்திதேவரை அடக்கியதாக கூறப்படுகின்றது. இவ்வாலயத்திலுள்ள சோமாஸ்கந்த மூர்த்தத்தில் நந்திதேவரை அம்பாள் தன் கைக்குள் அடக்கி வைத்திருப்பது போன்று அமைந்திருக்கின்றது.
ஸ்ரீ ராமர் வழிபட்ட லிங்கம் என்பதனால் ராமநாதஸ்வாமி என்ற திருநாமமும், இவ்வு+ருக்கு ராமனதீச்சரம் என்ற பெயரும் வந்தன.
தேவாரத்திருத்தலம்.