பிரம்மதேவனின் சாபத்தால் நோயுற்ற சூரியன், தேவ குருவின் யோசனைப்படி தனது சாபத்தைப் போக்கிக் கொள்ள, சிவ வழிபாடு செய்யவும், அதற்குரிய ஸ்தலத்தை தேர்ந்தெடுக்கவும், முற்பட்டு தேடி வரலானான்.
இவ்வூர் குளத்திலுள்ள தாமரைப்பூவில், ஓராயிரம் இதழ்கள் இருப்பதைக் கண்டு, அதிசயித்து, இதுவே உகந்த ஸ்தலம் என எண்ணி, குளத்திற்குள் இறங்கி, குளத்திலுள்ள செந்தாமரை மலரில், லிங்கமாக தோன்றினார். சூரியனின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான், அவனது சாபத்தையும், நோயையும், போக்கியருளினார்.
சாபத்தை நீக்கியருளியதற்கு நன்றிக்கடனாக சூரியன், அட்சய பாத்திரத்தை நிலைப்படுத்தி அன்னதானம் செய்தான் என ஸ்தல வரலாறு.
சோழ மன்னன் ஒருவன் தடாகத்தில் மின்னிய தாமரை மலரில் மயங்கி, அதை பறிக்க முற்பட்டதில், அவனது பார்வை பறி போனது. தாமரைக்குள் லிங்கம் இருப்பதை உணர்ந்த மன்னன், சிவ அபராதம் செய்தமைக்காக வருந்தினான். செய்த தவற்றிற்கு வருந்தினமையால்,
சுந்தரரின் மனைவி சங்கிலி நாச்சியார் பிறந்த ஊர். கண்வ மகரிஷி இவ்வூரின் அருகே ஆஸ்ரமம் ஒன்றை அமைத்து சிவபெருமானையும், சூரியனையும் வழிபட்டு முக்தி பெற்றார் என குறிப்பொன்று கூறுகிறது. பல் நோய் தீர, இவரை வழிபடுகின்றனர்.
பாஸ்கர க்ஷேத்ரம்.