அருள்மிகு புனுகீஸ்வரர் திருக்கோவில் (மயிலாடுதுறை)

Primary Deity
ம்ருகபதீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
மயிலாடுதுறை
Contact Number
+91-Not Available

புழுகீசம் என்றும் பாரிஜாதவனம் என்றும் ஆதியில் அழைக்கப்பட்ட இவ்வாலயம் அருகே வசித்து வந்த பூனைகள் இவ்விறைவனை ஆசையாக வழிபட்டன. இதனால் மகிழ்ந்த இறைவன், பூனைகளுக்கு அருள் புரிந்தார். புழுகீசர் என பெயரும் கொண்டார்.

சிவபெருமானை அழைக்காது தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட தேவேந்திரன் சாபமடைந்து புனுகுப் பூனையாக மாறி பூலோகம் வந்தான். தனியூரிலுள்ள வனத்தில் இருந்து கொண்டே, தினமும் இங்கு வந்து புனுகால் பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

இங்கு செய்யும் சிறு தானம் கூட அளவில்லாத பயன் தரும் எனக் கூறுவர். இங்கு முன்னோர்களுக்கு செய்யும் கடன்கள் கயாவில் செய்வதற்கு சமம் என்றும் கூறுவர்.

மூலவர்: ம்ருகபதீஸ்வரர், அம்பாள்: சாந்த நாயகி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ம்ருகபதீஸ்வரர். ஒளி வீசும் தேஜோமய லிங்கம்.

பங்குனி மாதம் 2, 3, 4, 5, 6 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மாலை நேரங்களில், ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. புழுகீசர் என்ற பெயரும் உண்டு. பாரிஜாத மரத்தின் கீழ் சுயம்பு லிங்கமாக தோன்றியவர்.

அம்பாள் சாந்த நாயகி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.

நந்தியம் பெருமானுக்கு காட்சி தந்த கோலம் விசேஷமானது. ஜ்வர தேவர் விசேஷ மூர்த்தியாக உள்ளார். தனி விமானம், தனி கும்ப கலசம் கொண்ட கருவறையில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவான் மிகுந்த வரப்பிரசாதி. சிகப்பு நிற கல்லில் உருவான திருமேனி. கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...