ஆத்ரேய கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் பைரவரை வழிபடுகின்றனர். ராவணன் தேரோடு இங்கு வந்தபோது தேர் புதைந்ததால் 'தேர் தகையூர்' எனப் பெயர் கொண்டு தற்போது 'தேதியூர்' என்றானது.
ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாள் கோவில் ஒன்றும், ஸ்ரீ லோகசுந்தரி சமேத சுதர்ஸனேச்வரர் கோவில் ஒன்றும், ஸ்ரீ மீனாட்சி உடனாய சுந்தரேச்வரர் கோவில் ஒன்றும் உள்ளன.