பத்து ஊர்களின் நிர்வாகத்தை இங்கிருந்தபடியே நடத்தினார்களாம். அதனால் பத்தூர் எனப் பெயர் பெற்று, பின்னர் மருவி பாதூர் ஆனதாக கூறுகின்றனர். எல்லைக்காவல் படை இங்கு தங்கியிருந்ததால் பாதூர் எனப் பெயர் கொண்டதாகவும் கூறுகின்றனர். (பாது என்றால் காவல்)
அஹோபில மடத்து 36வது பட்டம் ஜீயர் அழகிய வெண்சடகோப ஸ்ரீநிவாச மஹாதேசிகனின் ஜீவ பிருந்தாவனம் இருக்கின்றது.
தோல் வியாதிகளிலிருந்து குணமடையவும், அழகு மிளிரவும் இத்தலத்தில் பிரார்த்தித்துக் கொள்கின்றனர்.
அபிமான ஸ்தலம்.