பிரளய காலத்தில் பார்வதி தேவி இங்கு வந்தபோது, பொன்மலை ஒன்று மிதந்து வரக் கண்டாள். பொன்மலை இங்கு நின்றதும், அதனடிவாரத்தில் அமர்ந்து, தவம் புரிந்து ஈசனை வழிபட்டாள் என்றும் ஈசன் சுயம்பு லிங்கமாக பிரத்யட்சமானார் என்றும் ஸ்தல வரலாறு. மலையை விட்டு கீழே இறங்கும் வழியில் தேவி தவம் செய்த இடத்தில் தேவியின் திருவடியை காணலாம்.
உச்ரசேனன் எனும் மன்னன் புத்ரபாக்கியம் வேண்டி தவம் மேற்கொண்டான் எனவும் தேவியின் அருளால் பெண் குழந்தை ஒன்று பிறந்தது எனவும், அக்குழந்தைக்கு தேவிகா எனப் பெயரிட்டதாகவும், அதனால் இவ்வு+ர் தேவிகாபுரம் எனப் பெயர் கொண்டதாகவும் குறிப்பொன்று கூறுகிறது.
சக்தி ஸ்தலங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.