அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோவில் (திருப்புள்ளமங்கை)

Primary Deity
மூலவர்: பசுபதிநாதர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக்கோவில்களுள் ஒன்று. காமதேனு மடி சுரந்த பாலினால் லிங்கத்தை அபிஷேகம் செய்வது போன்ற புடைப்புச் சிற்பம் ஒன்று ஸ்தல வரலாற்றைக் குறிப்பிடுகிறது. பராந்தக சோழன் (907-953) புனர்நிர்மாணம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சோழர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக பல அரிய வேலைப்பாடுகளை உடைய சிற்பங்களைக் காணலாம். சிவ புராணம், ஹிரண்யவதம் தொடர்புடைய சிற்பங்களும், கிருஷ்ணர் பால் குடிக்கும் சிற்பமும் அற்புதமானவை.

சப்த மாதர்களுள் சாமுண்டி பூஜித்து வழிபட்ட ஸ்தலம். பார்வதி தேவி சக்ரவாகப் பறவையாக வந்து இவ்விறைவனை வழிபட்டதால் புள்ளமங்கை எனப் பெயர் கொண்டது. (புள் - பறவை)

தேவர்கள் அமிர்தம் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்கி திருமிடற்றில் அடக்கிய ஸ்தலம். இதனால் ஆலந்தரித்த ஈஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார்.

தேவாரத் திருத்தலம்.

மூலவர்: பசுபதிநாதர், அம்பாள்: பால்வளை நாயகி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பசுபதிநாதர். ஆலந்தரித்த ஈஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. சுயம்பு மூர்த்தம். அம்பாள் பால்வளை நாயகி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். அல்லியங்கோதை, சௌந்தர நாயகி போன்ற பெயர்களும் உண்டு.

இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி விசேஷமானவள். கருங்கல் குடையின் கீழ் எருமைத்தலை மீது நின்ற திருக்கோலம். சங்கு, சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் ஆகியன கரங்களில் கொண்டு, இரண்டு பேர் கத்தியால் தலையை அறுத்துத் தரும் பாவனையில், திரிபங்கி நிலையில் தரிசனம் தருகின்றாள்.

பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம், திருப்புள்ளமங்கை ஆகிய மூன்று ஸ்தலங்களிலும் துர்க்கை வடிவங்களை ஒரே சிற்பி உருவாக்கியதாக ஒரு குறிப்பு கூறுகிறது.

நவகிரகங்களுக்கு நடுவே நந்தியம்பெருமான். கோபுரத்தின் மீது எப்போதும் கழுகுகள் இருக்குமாம்.

சப்த மாதர்கள் பூஜித்த ஸ்தலங்களுள் ஒன்று.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...