அருள்மிகு பரசுநாதேஸ்வரர் திருக்கோவில் (முழையூர்)

Primary Deity
பரசுநாதசுவாமி
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

ஜமதக்னி முனிவர் இவ்விறைவனை வழிபட்டு பரசுராமனை புத்திரனாக அடையும் பாக்கியம் பெற்றார். தாயின் தலையை வெட்டிய தோஷம் நீங்க பரசுராமர் பூஜித்த ஸ்தலம். பரசு பீஜாட்சர லிங்க வடிவைச் சேர்ந்தது.

திருதியை திதி தேவதைகள் இங்கு தவமிருந்து, எதையும் விருத்தி செய்யும் ஆற்றலைப் பெற்றனர். ஒரு காலத்தில் அட்சய திருதியை தினத்தை விழாவாகக் கொண்டாடிய ஸ்தலம். பிரம்மாவின் அகங்காரம் களையப்பட்ட ஸ்தலம். அட்சய திருதியை நாளில் இவ்விறைவனுக்கு மாதுளை முத்துக்கள் கொண்டு காப்பு செய்தால் வீடு - மனை செழிக்கும் என்பர்.

இவ்வூரைச் சுற்றியுள்ள நான்கு படை வீடுகளில் இது பம்பைப் படைவீடு என சரித்திரத்தில் குறிப்பு உள்ளது. இவ்வூரைச் சுற்றிலும் சமணர்கள் 'முழைகள்' எனப்படும் சிறு குன்றுகளை தடுப்பாக அமைத்து வைத்திருந்தனர். இதனால் 'முழையூர்' எனப்படுகிறது.

மூலவர்: பரசுநாதசுவாமி, அம்பாள்: ஞானாம்பிகை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பரசுநாதசுவாமி. எட்டுப் பட்டைகளுடன் கூடிய உயரமான பாணம் கொண்ட அழகிய திருமேனி. மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரிய ஒளி சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கிறது. மேற்கு பார்த்த சந்நிதி. இவருக்கு தேன் அபிஷேகம் செய்தால் இரத்த அழுத்த நோய்கள், நீரிழிவு நோய்கள் நீங்கும்.

அம்பாள் ஞானாம்பிகை தனி சந்நிதி கொண்டுள்ளார்.

உமையொருபாகன், அண்ணாமலையார், அன்னபூரணி ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...