குபேரன் கையிலிருந்த அமிர்தம் இத்தலத்தில் சிறிதளவு சிந்திவிட, சிந்திய இடத்தில் சிவலிங்கம் சுயம்புவாக வெளிப்பட்டது. தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இங்கு அமிர்த தாரைகள் வழியும் லிங்கமாக எழுந்தருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
போகர் சித்தர் நவபாஷாணத்தால் உருவாக்கிய லிங்கமென்றும், சிவலிங்கத்திற்கு செய்யப்படும் அபிஷேகப் பொருட்களை உட்கொண்டால் பிணிகள் தீருமென்றும் நம்பிக்கை உள்ளது.