அருள்மிகு பால்வண்ண நாதேஸ்வரர் திருக்கோவில் (திருக்கழிப்பாலை - பைரவன் கோவில்)

Primary Deity
பால்வண்ண நாதேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
திருவள்ளூர்
Contact Number
+91-Not Available

பசுக்கள் தாமாகவே பால் பொழிந்த வெண்நிற மணலை எடுத்து, கபில முனிவர் ஒரு லிங்கத்தை உருவாக்கினார். மன்னனின் குதிரையின் குளம்பு பட்டு, லிங்கம் பிளவுபட்டு பள்ளம் ஏற்பட்டது. அதை அப்படியே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. வால்மீகி முனிவரும் இங்கு வழிபட்டுள்ளார்.

திருமுறைகள் காலத்தில் இவ்வாலயம், கொள்ளிட ஆற்றின் கரையில் காரைமேடு எனும் இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இயற்கையின் சீற்றத்தால் ஆற்றுப்பெருக்கு ஏற்பட்டதால், இவ்வாலயத்தை சிவபுரி அருகே ஸ்தாபித்தார்கள் என்று கூறப்படுகிறது.

மூலவர்: பால்வண்ண நாதேஸ்வரர், அம்பாள்: வேத நாயகி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக பால்வண்ண நாதேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இது ஒரு சுயம்பு மூர்த்தம். சிரசின் நடுவே ஒரு பள்ளத்துடன் காணப்படும் அமுதலிங்கம். பால்நிற வெண்மணலுடன், பலவிதமான மூலிகைகளைக் கொண்டு கபிலமுனி சித்தரால் உருவாக்கப்பட்ட லிங்கம் இது. அபிஷேகம் செய்தால் பால் மட்டும் லிங்கத்தில் தங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படும். தும்பைப்பூ அர்ச்சனை இவருக்கு மிகவும் பிரியமானது.

மூலவரின் பின்புறமாக, உமையவளுடன் கூடிய சந்திரசேகரரின் அழகிய திருமேனியை தரிசிக்கலாம். சிவ-பார்வதி திருமணக் கோலம் மிகவும் அழகாக இருக்கின்றது.

பிள்ளையார், விஜய விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், அகோர மூர்த்தி, புவனேஸ்வரி ஆகிய மூர்த்தங்களையும் இங்கு தரிசிக்கலாம். மிகப் பெரிய நந்தியம் பெருமான் மற்றும் உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.

இங்குள்ள சதுராக்னி துர்க்கை மிகுந்த வரப்பிரசாதி என்பர். மனக்குழப்பம், கவலை, படபடப்பு ஆகியவற்றை நீக்கி அருள்புரிகின்றாள். சுயம்பிரபை தேவியுடன் அதிகார நந்தி காட்சி தருகின்றார்.

விசேஷ மூர்த்தமாக எழுந்தருளியுள்ள காலபைரவர் இங்கு பிரசித்தமானவர். இவருக்கு நாய் வாகனம் இல்லை. 27 மண்டை ஓடுகளுடன் பூணூல், சர்ப்ப அரைஞாண் கயிறு அணிந்து, காசியிலிருப்பது போலவே ஜடாமுடியுடன் காணப்படுகின்றார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் இவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...