மூலவர்: பாலைவனநாதர், அம்பாள்: தவளவெண்ணகையம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான பாலைவனநாதர். சுயம்புலிங்கம்.
தவளவெண்ணகையம்மை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். முத்துச் சிரிப்பு நாயகி என்ற பெயரும் உண்டு. சுவாமி - அம்பாள் கல்யாணக் கோலத்தில் தரிசனம் தருகின்றனர். அம்பாள் ஆறடி உயர அழகிய திருமேனியுடன் திருமண பீடேஸ்வரியாக, கையில் அன்னக் கிண்ணத்துடன் மங்கள ஈஸ்வரியாக காட்சி தருகின்றாள்.
சுவாமி - அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.
உள் பிரகாரத்தில் கணபதி, முருகன், சோமாஸ்கந்தர், வசிஷ்ட லிங்கம், ராமலிங்கம், சூரியன், மலையத்துவச லிங்கம், நடராஜர் சபை, அறுபத்திமூவர், கால பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
கூம்புமுனையுடன் கூடிய வட்ட வடிவமான செங்கற்களால் கட்டப்பட்ட நெற்களஞ்சியம் ஒன்றும் காணலாம். 86 அடி (26மீ) அகலமும், 36 அடி (11மீ) உயரமும் கொண்ட கொள்கலம். மூன்று வாசல்களுடையது. இது 3,000 கலம் நெல் கொள்ளளவு உடையது. தற்போது உபயோகத்தில் இல்லை. (1600-1634)