'பாடல்' என்றால் சிகப்பு, 'அத்ரி' என்றால் குன்று. ஆகவே பாடலாத்ரி என்பது சிவந்த குன்றைக் குறிக்கும். இங்குள்ள மூலவர் மிகப் பெரிய திருமேனியுடன், குன்றையே உடம்பாகக் கொண்டு, குன்று போல் காட்சி அளிப்பதால் பாடலாத்ரி நரசிம்மர் எனும் திருநாமம் கொண்டார்.
தூணிலிருந்து வெளிப்பட்டு ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்த அதே உக்ர ஸ்வரூபத்தை தரிசிக்க ஆசை கொண்ட ஜாபாலி மகரிஷி, இத்தலத்தில் தவம் மேற்கொண்டார். தவத்தில் மகிழ்ந்து அவருக்கு பிரத்யட்சமான நரசிம்மர், அவரது வேண்டுகோளின்படி, அதே உக்ர ஸ்வரூபத்தில் சேவை சாதிக்கின்றார்.
பிரதோஷ காலத்தில் அவதரித்தவர் நரசிம்மர். பிரதோஷ வழிபாடு உகந்தது.
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெறும். அவதார நட்சத்திரமான ஸ்வாதியில் விசேஷமாக கொண்டாடுவார்கள்.
அபிமான ஸ்தலம், அஷ்ட நரசிம்ம க்ஷேத்ரங்களுள் ஒன்று.