சிவபெருமானிடம், அவரில் பாதியாக திகழ அருள வேண்டி, வாழப்பந்தல் எனுமிடத்தில் தவமிருந்து, வழிபாட்டினை நடத்தி முடித்து விட்டு, இத்தலம் வந்து தவம் இருந்தாள் பார்வதி. ஏழு ரிஷிகள் காவலுக்கு இருக்க, மகிஷாசுரனின் எருமைத் தலையை வெட்டி வீழ்த்தி விட்டு, தோஷத்தைப் போக்கிக் கொள்ள, இங்கு தவமிருந்த பார்வதிக்கு, தன்னில் பாதியை தந்து சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என ஸ்தல வரலாறு.
அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவில், திருவண்ணாமலை
Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
திருவண்ணாமலை
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் கிழக்கு பார்த்து அமர்ந்த கோலத்தில் தரிசனம் தரும் பச்சையம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். பச்சை நிற ஆடையில், சர்வாலங்கார பூஷிதையாக, அழகே உருவாக காட்சி தருகின்றாள். இடப்பக்கமாக மன்னாதீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அடுத்து கௌதமர் உள்ளிட்ட ஏழு ரிஷிகளின் சிலைகள் பயமுறுத்தும் தோரணையில் வெட்டவெளியில் காணப்படுகின்றன. இதன் பின்னாலும் ஏழு ரிஷிகளின் பழைய சிலைகள் இருக்கின்றன. மிகப் பெரிய அளவிலான யானை மற்றும் குதிரை சிலைகளைக் காணலாம். அம்மன் குதிரை எனப்படும் குதிரை மீதேறி பச்சையம்மன் தினமும் நகர்வலம் வருகின்றாள் என ஐதீகம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.