கரிகால சோழன் இவ்விறைவனை வழிபட்டு தனது பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் வழிபட்டதாக ஸ்தல புராணம் தெரிவிக்கின்றது.
காமதேனுப் பசு லிங்கத்தை வழிபாடு செய்துள்ளதாக ஸ்தல புராணம் மேலும் தெரிவிக்கின்றது.
இருளர்களின் தலைவனான இருவன் என்பவன் பெயரில் இருகூர் என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.