நர்த்தனம் ஆடி வந்த சிவபெருமானின் காலிலிருந்த மணி கழன்று விழுந்தது. அதை கண்டெடுத்து தந்தையின் காலில் கட்டிய மணிகட்டிப் பிள்ளையார் இங்கு காட்சி தருகிறார்.
அனைத்து இயக்கங்களும் தன் தலை மீது நடைபெறுவதாக முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்கும் தாண்டவம் ஆடி காட்டிய இடம் இது. விரிந்த சடையினராக இல்லாமல், ஒற்றை சடையுடன் ஒரு புறம் சாய்ந்து காணப்படுகிறார்.
1972ஆம் ஆண்டு இந்த நடராஜர் உற்சவ விக்ரஹம் களவாடப்பட்டதாகக் கூறுகின்றனர்.
இத்தலத்தைப் பற்றிய தகவல்கள் பல செப்பேடுகளில் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.
சிவனார் திருநடனம் புரிந்தபோது, அவரது காலில் இருந்த சலங்கை மணிகள் தெறித்து விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று. திருத்தாண்டவத் தோட்டம் என்பது மருவி தண்டந்தோட்டம் என்றானதாகக் கூறப்படுகிறது.
தேவார வைப்புத்தலம்.