அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் (காரைக்குடி)

Primary Deity
-
Temple Type
மாரியம்மன் கோயில்
Location
தஞ்சாவூர்
Contact Number
+91-Not Available

லலிதா எனும் எட்டு வயதுச் சிறுமி ஒருத்தி இவ்வூருக்கு வந்து ஒரு மூலையில் இடம்பிடித்துக் கொண்டாள். அவள் உடல் முழுவதும் அம்மை நோய் கண்டிருந்தது. ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து அவளுக்குப் பணிவிடைகள் செய்தனர். நாளடைவில் குணமடைந்த அழகிய சிறுமி அருள்வாக்கு கூறத் தொடங்கி ஊர் மக்களுக்கு நல்லது செய்தாள். அவளை நம்பாத ஒருவரது வீட்டுக் கிணற்றில் தக்காளிச் செடி ஒன்றிருப்பதாகவும், அதில் ஒரு தக்காளி காய்த்திருப்பதாகவும், அதனைக் கொண்டு வருமாறும் கூறினாள். தன் வீட்டில் தக்காளிச் செடியே இல்லை என மறுத்த அந்த நபருடன் ஊர் மக்கள் சென்று பார்க்க, சிறுமி கூறியபடியே இருந்ததாம். சிறுமி மாயமாய் மறைந்தாள். தான் மகமாயி என்றும், ஊரைக் காக்க வந்தவள் என்றும் அசரீரியாக ஒலித்தது. சிறுமி மாயமாய் மறைந்த இடத்தில் அவளது திருவுருவத்தை விக்ரகமாகப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். பின்னாளில் ஆலயம் எழுப்பியுள்ளனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இவ்வாலயத்தில் அர்ச்சனைத் தட்டு வாங்கினால், அதில் தக்காளியும் இடம் பெற்றிருக்கும். தக்காளியால் அர்ச்சனை மற்றும் தக்காளி மாலை அணிவித்தல் ஆகியன விசேஷமாகக் கருதப்படுகிறது.

மூலஸ்தானத்தில் நின்ற திருக்கோலம் கொண்டு மூலவராக எழுந்தருளியிருக்கும் முத்துமாரியம்மன் சுற்றுவட்டாரக் கிராமங்களைக் காப்பவள். கருணை ததும்பும் விழிகள் - பார்ப்போரை பரவசமூட்டும் வதனம் - சந்தன காப்பில் ஒளிர்விடும் திருமேனி கொண்டு காட்சி தருபவள். உற்சவ அம்மனின் பஞ்சலோகத் திருமேனியும் மிகவும் அழகானது. மாசி - பங்குனித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மாசி கடைசி செவ்வாயன்று காப்பு கட்டித் துவக்கப்படும் விழா 36 நாட்களுக்கு அமர்க்களமாக நடைபெறும். எல்லா ஊர்களிலிருந்தும் வரும் பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி, மேளதாளத்துடன் பால்குடம் ஏந்தி வருவார்கள். டாங்கர் லாரிகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை எடுத்துக்கொண்டு வருவார்கள். பால்குட அனுமதிச் சீட்டுகள் 50,000-ஐத் தாண்டிவிடுமாம். கோவில் வாசலில் 30 அண்டாக்களில் பாலை நிரப்பி வைத்து, மோட்டார் பைப் மூலம் கருவறைக்குள் இருக்கும் அண்டாவுக்கு மாற்றி, நாள் முழுவதும் தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இரவு வரை நீளும் சமயங்களும் உண்டு. பித்தளைக் குடத்தில் தென்னம்பாளை (மதுக்குடம்), முளைப்பாரி கொண்டு வருவார்கள். அக்னி சட்டி ஏந்துவது, பொங்கல் படையல், பூக்குழி இறங்குவது போன்ற நேர்த்திக்கடன்கள் முடித்து திருவீதி உலா நடைபெறும். கரக ஆட்டங்களும் நடைபெறும்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...