ஆதிகாலத்தில் பணிபுரிந்த இவ்வாலயத்து அர்ச்சகரின் மனைவி, சிவலிங்கத்திற்கு அணிவிக்கவிருக்கும் மாலையைத் தான் அணிந்துகொண்டு அழகு பார்ப்பாளாம். அவள் அணிந்த மாலைகளில் ஒன்று அரசனைச் சென்றடைந்தது. அதில் கேசம் இருப்பது கண்டு, கோபம் கொண்டான் மன்னன். அர்ச்சகரைத் தண்டிக்க முற்பட்டான். அர்ச்சகரையும், பக்தையையும் காப்பாற்றுவதற்காக, தனது சிரசில் குடுமி இருப்பதாகக் காட்டி அரசனின் கோபத்திலிருந்தும், அவன் அளிக்கவிருந்த தண்டனையிலிருந்தும் காப்பாற்றினார்.
நெற்கதிர்கள் பொன் மணிகளாக விளைந்ததால் பொன் விளைந்த களத்தூர் எனப் பெயர் கொண்டது. பசுமையான வயலின் நடுவே அமைந்துள்ள கோவில்.