ஸ்தல வரலாறு:
குடி மக்களின் குறை தீர்த்த நாச்சியாரின் ஸ்தலம். பெண்களிடம் தகாது நடந்து கொண்டு, தீய செயல்கள் புரிந்த ஒருவனுக்கு, ஊர்சபை கூடி வழங்கிய தண்டனை அவன் மூலட்டானேஸ்வரர் ஆலயத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதே.
தீய செயல் புரிந்தவனின் மனைவி, ஊர்சபை நீதிபதிகளில் ஒருவர். மனைவி என்ற முறையில் கணவனுக்கு பதிலாக ஆலயத்தை சுத்தம் செய்தாள் என ஸ்தல வரலாறு.
பல்லவ மன்னன் நந்திவர்மனின் பல வெற்றிகளுக்கு மூலட்டானேஸ்வரரே காரணம் எனக் கூறுவர்.