பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் கிள்ளி எறிந்ததால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. சரஸ்வதியின் சாபத்தால் சிவனின் கையில் கபால ஓடு ஒட்டிக் கொண்டது. பார்வதி தேவியையும் அகோர வடிவம் பெறுமாறு சரஸ்வதி சபித்து விட்டாள். சிவபெருமான் கொண்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், தன்னுடைய அகோர வடிவம் நீங்கி பழைய வடிவம் பெறவும், பார்வதி தேவி இங்கு புற்று வடிவில் தோன்றி அமர்ந்தாள் என ஸ்தல வரலாறு. பின்னர் திருவண்ணாமலைக்கு சென்ற பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பழைய உருவம் கிடைக்கப் பெற்று அங்காள பரமேஸ்வரியாக இங்கு மீண்டும் வந்தமர்ந்தாள் என ஸ்தல வரலாறு மேலும் விவரிக்கின்றது. மயானக் கொள்ளையன்று பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ள விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் கூடி தேர்த்திருவிழா நடத்துகின்றனர் என ஐதீகம். ஒவ்வொரு வருடமும் புதிய தேர் செய்யப்படுவதாக குறிப்பொன்று கூறுகிறது. மயான சாம்பல், குங்குமம், புற்று மண் ஆகியவற்றை பிரசாதமாக பெற்று செல்கின்றனர். புற்று மண்ணை 48 நாட்களுக்கு இட்டுக் கொண்டால் எந்தத் தீவினையும் அண்டாது என்பார்கள்.
அருள்மிகு மேல்மலையனூர் அம்மன் திருக்கோவில் (மேல்மலையனூர்)
Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
விழுப்புரம்
Contact Number
+91-Not Available
மகா மண்டபத்தில் புற்றுருவாய் காட்சி தரும் அங்காளம்மன் சுயம்பு வடிவினள். கருவறையில் திருவுருவம் கொண்டு தரிசனம் தருகின்றாள். அன்னபூரணி, கோபால விநாயகர், பாவாடைராயர் ஆகியோரை தரிசித்து விட்டு குளக்கரையின் தெற்கில் பெரியாயி எனும் கிராம தேவதையை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.