இரண்டாம் குலசேகர பாண்டியன் கட்டிய கோவில். கடல் சீற்றத்திற்கு உள்ளாகி பெரும் சேதத்திற்குள்ளானது. தற்போது தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பராமரிப்பிலுள்ளது.
கடலில் மறைந்திருந்த தாருகாசுரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், அசுரனின் மாயைகளைக் கண்டு சற்று தயங்கினாராம். பார்வதி தேவி முருகனின் முன் தோன்றி தயக்கத்தைத் தீர்த்ததால் தயக்கம்பாடி எனப் பெயர் கொண்டு, நாளடைவில் மருவி தரங்கம்பாடி என்றானது.