அகஸ்தியர் இத்தலம் வந்தபோது, ஏராளமான கூட்டம் இறைவனை தரிசிக்க காத்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போக முடியாததால், அகஸ்தியர் ஈ வடிவம் கொண்டு உள்ளே சென்று இறைவனை தரிசித்து ஆனந்தம் அடைந்தார். இதனால் இத்தலம் ஈங்கோய் மலை என்ற பெயரைக் கொண்டது.
இத்தலத்தில் திரிந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று, தன் இஷ்டத்திற்கு சேட்டைகளை செய்து கொண்டு ஒரு தேன் கூட்டை பிய்த்து எறிந்தது. தேனீக்களிடம் கடிபட்டும் விடாமல் தேனடையை தூக்கிக் கொண்டு ஓடியது. அதிலிருந்து சிந்திய தேன் சிவலிங்கத்தின் மீது விழுந்தது.
சிவபெருமானுக்கு தேனபிஷேகம் செய்த பலனைப் பெற்ற குரங்கு, மறு பிறவியில் மகத தேச மன்னன் சுப்பிரபனாக ஜனித்தது. மன்னன் சுப்பிரபன் சுவாமிக்கு தினமும் இரண்டு வேளை தேனபிஷேகம் செய்து வந்தான். ஒரு நாள் இறைவன் அவனை சோதிக்க எண்ணியதால் தேன் கிடைக்காமல் போனது. தேனபிஷேகம் செய்ய முடியாமல் போனதால் வருத்தமுற்ற சுப்பிரபன் தனது காதை அறுத்துக் கொள்ள முற்பட்டான். அங்கு பிரத்யட்சமான இறைவன் அச்செயலைத் தடுத்து அவனை ஆட்கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இரட்டை மலை, மரகத மலை, சிவசக்தி மலை என்றெல்லாம் போற்றப்படும் அருகேயுள்ள வாட்போக்கி மலை கடம்பந்துறையைப் பார்க்கிறது. கடம்பந்துறை மலை பார்க்கிறது. மூன்று மலைகளுமாக சேர்ந்து சோமாஸ்கந்த வடிவம் கொண்டுள்ளது.
காவிரியின் தென்கரையில் உள்ள கடம்பந்துறையில் கடம்பர் கோவில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் காலைக் கடம்பர். அருகேயுள்ள வாட்போக்கி மலையில் இருப்பவர் மத்தியான சொக்கர்.
நக்கீரர் பாடிய பதிகங்கள்.
அம்பிகை வழிபட்டதால் சிவசக்திமலை என்ற பெயர் கொண்டது.
தேவாரத்திருத்தலம்.