ஸ்ரீ ராமர் இலங்கை செல்லும் முன் இவ்விறைவனை வழிபட்டு மந்திர உபதேசம் பெற்றார். இதனால் இவ்விறைவனுக்கு 'மந்திரபுரீஸ்வரர்' என்ற பெயர் வந்தது. (கடலில் அணை கட்டும் முறைகளை இங்கு பெற்றதாகக் கூறப்படுகிறது.)
இத்தலம் 'உசாத்தானம்' எனப் பெயர் கொண்டது.
அஷ்டாவக்ரன் என்ற முனிவரின் சாபத்திற்காளான வருணன், மந்திரபுரீஸ்வரரை வழிபட்டு தனது நோய் நீங்கப் பெற்றார்.
ஸ்ரீராமர், லக்ஷ்மணர், ஜாம்பவான், சுக்ரீவன், ஹனுமன், இந்திரன், விஸ்வாமித்ரர், வருணன் ஆகியோர் பூஜித்து வழிபட்டுள்ளனர். விஸ்வாமித்ரருக்கு நடனக் கோலம் காட்டியருளிய ஸ்தலம் இது.
ஆதிசேஷனே பதஞ்சலி முனிவர் வடிவில் இருந்தபோது இக்கோவிலைக் கட்டியதாக சூதபுராணம் கூறுகின்றது. இந்த இடம் முன்பு மாமரக்காடாக இருந்தமையால் 'சூதவனம்' எனப் பெயருற்றது.
இங்குள்ள மார்க்கண்டேய தீர்த்தத்தில் நீராடினால் சரும வியாதிகள், முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்குவதாக கூறுகின்றனர்.