ஆற்றோரமாக குடில் ஒன்று அமைக்கும் பணியில், புதையுண்டிருந்த லிங்கத்தின் தலையில் வெட்டு விழுந்தது. ரத்தம் பீறிட்டு வந்ததும், கவனித்ததில் லிங்கத்தைக் கண்டனர். மிகவும் வருந்திய பாண்டிய மன்னன் லிங்கத்தை வெளியே எடுக்க முயன்று தோல்வியுற்றான். ஆவுடையை வெளியே எடுக்க இயலாததால், அதன் மேலேயே செயற்கை ஆவுடை சாத்தி லிங்கப் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
அருள்மிகு மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் (கீழ் மாத்தூர்)
Primary Deity
மணிகண்டேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
திருவள்ளூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக மணிகண்டேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சுயம்பு மூர்த்தம். சூரிய-சந்திரர்களும், இந்திரனும் மணியடித்து பூஜித்து வழிபட்டதால் மணிகண்டேஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். எதிரே சூரிய-சந்திரர்களின் சிலைகள் காணப்படுகின்றன. கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவர் சிற்பம் அழகாக உள்ளது. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் உமாமகேஸ்வரி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.