இந்த மலைக் கோவிலில் உள்ள கரகப்பாறை எனுமிடத்தில் அம்மன் முன்பாக நின்று சத்தியம் செய்வது, கோர்ட்டினால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்.
இங்குள்ள மலையலங்கார ஸ்வாமியையும், செம்பாயி அம்மனையும், கல்யாண விநாயகரையும் கோவலன் - கண்ணகி மற்றும் கவுந்தி அடிகள் வழிபட்டதாக சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது.
பங்குனி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமை இரவு பச்சை மண்ணால் உருவாக்கப்பட்ட அம்மனின் திருவுருவம். முத்தாளம்மனின் தரிசனம் காண லட்சம் பேர் கூடி விடுவார்கள். அலங்கரித்த பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மன் கோவிலுக்கு திரும்பும்போது புதன் மாலை நான்கு மணி அளவில் ஆகிவிடுமாம். மாவிளக்கு பூஜை முடித்து ஊரணிக்கரை வந்ததும் உடைத்து விடுவார்கள். எல்லோரும் துயரத்தோடு பிரிந்து செல்வார்கள்.
ஊருக்குள் தண்டோரா அடிப்பது, அம்மன் செல்லும் பாதையை சுத்தம் செய்வது, அம்மனை உருவாக்குவது, அம்மனை அலங்கரிப்பது, நகைகள் அணிவிப்பது, காவல் இருப்பது என அவரவர்கள் வேலைகளைப் பிரித்துக் கொண்டு, அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக செயல்படுவார்கள். முடிவில் மத பேதமின்றி அனைவர்க்கும் மரியாதை செய்யப்படும்.