கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்று. கிழக்கு பக்கம் தவிர மற்ற எல்லா பக்கங்களிலும், கோயிலைச் சுற்றி, மாலையிட்டது போல் ஓடையொன்று அகழி போலுள்ளது.
முன் ஜென்ம ஊழ்வினையால் கரிக்குருவியாகப் பிறந்து, எல்லா பறவைகளாலும் விரட்டப்பட்டு, மதுரை சென்று, சோமசுந்தரரை தரிசித்து, வலியன் உருவம் பெற்று, இத்தலம் வந்து இவ்விறைவனை பூஜித்து வழிபட்டது. இதனால் இவ்வூர் வலிவலம் எனப் பெயர் பெற்றது.
சூரியன் இவ்விறைவனை வழிபட்டு, கோயிலை வலம் வந்தபோது, அவனது தேர் சக்கரம் அழுந்தப் பெற்று, கோயிலைச் சுற்றி அகழி உருவானது. தேருக்கு ஒரே சக்கரம் என்பதால் ஏகச்சக்கரபுரம் என்ற பெயர் வந்தது.
"பிடியதன் உரு" என்ற பதிகம் பிள்ளையாரை முன் நிறுத்தி ஞானசம்பந்தரால் பாடப்பட்டது இத்தலத்தில்தான்.
தமிழ்த் தாத்தா தொகுத்து வழங்கிய வலிவல மும்மணிக்கோவை பிரசித்தி பெற்றது.