ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா பரமேஸ்வரி தேவியின் பிரம்மாண்டமான திருவுருவம் பிரம்மிப்பைத் தருகின்றது. 72 அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. நேர்த்தியான சுதைச் சிற்பம். உலகிலேயே மிகப் பெரியது என்கின்றனர். கருவறையின் விமானம் மஹாமேருவின் வடிவில் அமைந்துள்ளது விசேஷமானது என்பர்.
கஜப்பிருஷ்ட விமானத்தைக் கொண்ட கருவறையில் எழுந்தருளியுள்ள பிரளய விநாயகர் மிகுந்த வரப்ரசாதி. அனேக தெய்வீக திருவுருவங்களுடன் காணப்படும் காமதேனுவின் சுதைச் சிற்ப வடிவம் அழகாக இருக்கின்றது.
அஷ்டதிக் பாலகர்கள், சப்த மாதர்கள், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், உக்ர நரசிம்மர், தன்வந்த்ரி, மஹாலட்சுமி, கால பைரவர், வாஸ்து பகவான், வருண பகவான், அக்னி பகவான் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
வாழை நாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலை இவளுக்குப் பிடித்தமானது என்பதால், இந்த மாலையைச் சாற்றி வழிபடுகின்றனர்.