மதலோலை என்பவளின் ராட்சஸ புத்திரர்களான அம்பன், அம்பரன் ஆகிய இருவரும் இத்தலத்திற்கு வந்து, இவ்விறைவனை வழிபட்டு, இறவா வரம் பெற்றவர்கள். இதனால் கர்வம் மிகுந்து, அனைவரையும் துன்புறுத்தி வந்தனர்.
அவர்களை அழிக்கப் புறப்பட்ட மாகாளி அழகான மோகினி வடிவம் கொண்டாள். அவளுக்குத் துணையாக வயோதிக வடிவத்தில் திருமால் சென்றார். இருவருமாக ராட்சஸர்கள் எதிரே போய் நின்றனர்.
மோகினி மீது ஆசை கொண்ட அம்பன், அம்பரன் இருவரும் வயோதிகரிடம் சென்று, அந்தப் பெண்ணை மணம் முடித்துத் தருமாறு வேண்டினர். "உங்களில் ஒருவர் மணம் செய்து கொள்ளலாம். யார் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்றார் பெரியவர்.
இருவரும் பலப்பரிட்சையில் இறங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மோதினர். இந்தச் சண்டையில் அம்பாசுரன் அம்பனைக் கொன்றான். உடனே காளி தேவி மோகினி வடிவம் விடுத்து காளி உருக் கொண்டு அம்பாசுரனை வதம் செய்தாள். அம்பாசுரனை வதைத்த தோஷம் நீங்க மாகாளரை வழிபட்டாள் காளி என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சுந்தரரின் வேண்டுகோளின்படி சோமாசி மாற நாயனாருக்கு அருள் புரிய நீச வடிவினராய் வந்தார் இறைவன் என ஸ்தல வரலாறு.
அசுரர்களைக் கொன்ற தோஷம் நீங்க இத்தலத்தில் இவ்விறைவனைப் பூஜித்தாள் என ஸ்தல வரலாறு.
மஹாகாள ரிஷி பூஜித்த ஸ்தலம் என்பதால் மாகாளம் எனப் பெயர் கொண்டது.