அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோவில் (மைலாப்பூர்)

Primary Deity
மூலவர்: ஸ்ரீ மாதவப் பெருமாள்் உற்சவர்கள்: அரவிந்த மாதவன், நீராஞ்சன மாதவன்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்த ப்ருகு முனிவர்க்கு, மஹாலட்சுமியே குழந்தையாக வந்து அவரது ஆஸ்ரமத்தை அடைகிறாள். அமிர்தவல்லி என நாமகரணம் சூட்டி குழந்தையை வளர்த்து வருகிறார் ப்ருகு முனிவர். ஸ்ரீ மாதவன் ப்ருகு முனிவரை அணுகி அப்பெண்ணை மணக்க ஆசைப்படுவதாக தெரிவிக்கின்றார். பங்குனி உத்திரத் திருநாளில் மாதவனுக்கும்-அமிர்தவல்லிக்கும் திருமணம் முடித்து வைக்கின்றார் ப்ருகு முனிவர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.

இக்கோவிலின் அருகேயுள்ள மணிகைவரம் (அருண்டேல் தெரு) எனும் கிணற்றில் செவ்வல்லிப் பூ ஒன்றில் அவதரித்தார் பேயாழ்வார் - ஸ்ரீ மாதவப் பெருமாளின் நாந்தகம் எனும் வாளின் அம்சமாக கருதப்படுபவர். ஆழ்வார்களில் மூன்றாமவர். அனுதினமும் ஸ்ரீ மாதவனையே பூஜித்து வழிபட்டு வந்தவர். ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று அவதரித்தவர். இவர் அருளிய பாசுரங்கள் திருவந்தாதி எனப் பெயர் கொண்டு நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஒரு அங்கமாக உள்ளது.

மூலவர்: ஸ்ரீ மாதவப் பெருமாள்் உற்சவர்கள்: அரவிந்த மாதவன், நீராஞ்சன மாதவன்் தாயார்: ஸ்ரீ அம்ருதவல்லி.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ மாதவப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இது கல்யாண கோலம் என்பார்கள். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.

பெரிய மாதவன், சின்ன மாதவன் என இரண்டு உற்சவ மூர்த்திகள் சேவை சாதிக்கின்றனர்.

வலது புறமுள்ள தனி சந்நிதியில் ஸ்ரீ அம்ருதவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார்.

மேற்குப்புறமாக பூ வராஹர் சந்நிதி கொண்டுள்ளார். மாணவ மாணவிகளுக்கு வரப்பிரசாதியாக விளங்கும் இவருக்கு பிப்ரவரி மாதத்தில் சிறப்பு ஹோமங்கள் செய்கின்றனர்.

பேயாழ்வார், விஷ்வக்சேனர், மணவாள மாமுனி, ராமாநுஜர், வேணுகோபாலன் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம்.

மண்டபத் தூணில் தும்பிக்கை ஆழ்வார் இடம் பெற்றுள்ளார். திருநாராயணபுரம் செல்லப்பிள்ளைக்கு தனி சந்நிதி உள்ளது. தனி கருட வாஹனம். மாசி-பங்குனி உத்திரத்தில் வைரமுடி சேவை விழாவும் உண்டு.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...