வாயு பகவான் அமிர்த கலசத்தை எடுத்துச் செல்லும் போது, அதை தவற விட்டார். இத்தலத்து முருகப் பெருமான் அதை தாங்கிப் பிடித்து, தேவர்களிடம் அளித்ததாக வரலாறு. கீழே சிதறிய அமிர்தம் சிவலிங்கமாயிற்று. இதனால் இறைவனுக்கு அமிர்தகடேஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டது.
உத்தராயண - தட்சிணாயண காலங்களில் சமுத்ர ஸ்நானம் செய்வது விசேஷமாக கருதப்படுகிறது.