அருள்மிகு குமாரசுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (கொண்டல் - கீழ்ப்பழநி)

Primary Deity
குமாரசுப்ரமண்யர்
Temple Type
Murugan Temples
Location
வேலூர்
Contact Number
+91-Not Available

பேரழகுடன் இருக்கும் இந்த முருகப்பெருமான் சுற்று வட்டார கிராம மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்த்து வைக்கின்றார். பிரணவத்தின் பொருளைக் கூறாத பிரம்மனை சிறை வைத்தார் முருகன். பிரம்மனை விடுவிக்க வேண்டி சிவபெருமானும் திருமாலும் வந்த ஸ்தலம் என ஸ்தல வரலாறு கூறுகின்றது.

மூலஸ்தானம் அழகிய மகாமண்டபத்துடன் இருக்கின்றது. சுதை சிற்பங்களாக துவாரபாலகர்கள் பெரிய திருவுருவங்களாக நிற்கின்றனர். பிள்ளையாரிடம் ஆசி பெற்று, மகாமண்டபத்திற்குள் சென்றால் பூரணா-புஷ்களா சமேத அய்யனாரை தரிசிக்கலாம். ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட அழகிய சிற்பம். விநாயகர், பரமேஸ்வரர், விஷ்ணு, தாரகபரமேஸ்வரன் மற்றும் நாகர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். மூலவராகவும் உற்சவராகவும் இடும்பனுக்கு மூர்த்தங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் குமாரசுப்ரமண்யர் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். மேற்கரங்களில் ஆயுதங்கள் இருக்க, கீழ்க்கரங்கள் அபய-வரத முத்திரைகளுடன் காணப்படுகின்றன. வள்ளியும் தெய்வயானையும் உடன் உள்ளனர். மயில் தெற்கு பார்த்து உள்ளது. முருகன் வஜ்ரவேல் வைத்திருப்பது விசேஷம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...