சப்த மாதர்களுள் ஒருவரான கௌமாரி தேவி வழிபட்ட ஸ்தலம் இது. சிவபெருமானின் சூல தரிசனம் பெற்றதால் இத்தலம் சூலமங்கை எனப் பெயர் பெற்றது.
சாரதா நவராத்திரியின் மூன்றாவது நாள் அன்னை கௌமாரி இறைவனை வழிபட்டு சூல தரிசனம் பெற்றதாக ஒரு குறிப்பு கூறுகிறது. இந்த திரிதியை தினத்து இரவு இறைவனை வணங்குதல் கூடுதல் விசேஷம்.
தெய்வங்களுக்குரிய ஆயுதங்களைத் தயாரிப்பவர் அஸ்த்ரதேவர். இவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
நமது கர்மாக்களை ஒழித்து நற்கதி வழங்குபவர் இவர். இவரை வழிபட்டால் மனதிலுள்ள துவேஷம் நீங்கி, ஸ்நேக உணர்வு பெருகும்.
இவர் இங்கு தவமிருந்து சிவபெருமானிடமிருந்து வரங்களைப் பெற்றவர். உற்சவங்கள் மற்றும் தீர்த்தவாரி சமயத்தில் தானே முதன்மையானவராக இருக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றவர்.
இது ஒரு தேவார வைப்புத்தலம்.